தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜி மிகப்பெரிய விளைவுகளை சந்திப்பார்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் எச்சரிக்கை

ராஜேந்திர பாலாஜி மிகப்பெரிய விளைவுகளை சந்திப்பார்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் எச்சரிக்கை

kaleelrahman

திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசிவரும் ராஜேந்திர பாலாஜி எதிர்காலத்தில் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரித்து கைது செய்யப்பட்டு, அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த திமுகவினரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார். 


அப்போது, "நேற்றைய தினம் உள்ளூர் அமைச்சர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, எங்களுடைய தலைவர்களை பற்றியும், தலைவர் குடும்பத்தை பற்றியும் மிகவும் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்.


அரசியலில் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். எங்களுடைய தலைவர் தரத்தோடுதான் யாரையும் விமர்சிக்கிறார். முதல்வர் ஊழல் செய்தார் என விமர்சிக்கும் உரிமை எதிர்கட்சிக்கு உண்டு. தாங்கள் செய்யும் தவறுகளை எடுத்துரைக்கும் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார் என்ற எரிச்சலைப் பார்க்க முடிகிறது.


தரங்கெட்ட மனிதராக மட்டமாக பேசி இருக்கின்ற அமைச்சரை, விருதுநகர் மாவட்ட திமுகவினர் கண்டிப்பதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து இதுபோல் அவர் பேசிக் கொண்டிருப்பாரானால், ராஜேந்திர பாலாஜியின் நாவை எப்படி அடக்குவது என்பதை நாங்கள் தெரிந்து வைத்திருக்கிறோம். அடக்கவேண்டிய நேரத்திலே அடக்குவோம்.

எங்களுடைய தலைவர் எதையும் நிதானத்தோடு போகவேண்டும் என கூறி இருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கு இந்த வேலையை செய்து இருக்கிறோம். நாளைக்கு தொடர்ச்சியாக இதேபோல் அவருடைய செயல்பாடுகள் இருக்குமேயானால் எதிர்காலத்தில் மிகப்பெரிய விளைவுகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கும் என கூறினார்.