தமிழ்நாடு

கடனாளியாக்குவதுதான் சாதனை: பட்ஜெட் பற்றி ஸ்டாலின்

கடனாளியாக்குவதுதான் சாதனை: பட்ஜெட் பற்றி ஸ்டாலின்

Rasus

தமிழகத்தை மிகப்பெரிய கடனாளியாக்குவதுதான் அதிமுக அரசின் சாதனை என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது மாநிலத்தை மிகப் பெரிய கடனாளியாக்குவதுதான் இவர்களின் ஒரே சாதனை என்றார். அதிமுக சார்பாக முதலமைச்சர்கள் மாறினாலும் பட்ஜெட் என்னவோ கடனில்தான் உள்ளது என்று அவர் கூறினார். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இல்லை என்று கூறிய அவர், குறிப்பாக வறட்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி என்பது பற்றியெல்லாம் எதுவும் இல்லை என்றார். ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்பட்டதா என்பது குறித்து ஒரு அறிவிப்பும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தொலைநோக்குத் திட்டம் 2023 என்னாயிற்று என்று கேள்வியெழுப்பிய ஸ்டாலின், தமிழகத்தின் மின் தேவைக்காக புதிய திட்டங்கள் கொண்டுவருவது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.