தமிழ்நாடு

ஆண்டின் கடைசி நாள்: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர் வீதி உலா

ஆண்டின் கடைசி நாள்: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற தங்கத்தேர் வீதி உலா

kaleelrahman

திருத்தணி முருகன் கோயிலில் தங்கத் தேர் வீதி உலா நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேதராய் உற்சவமூர்த்தி முருகக்கடவுள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலில், ஆண்டின் கடைசி நாளை முன்னிட்டு தங்கத் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் திருத்தணி கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி துணை ஆணையர் ரமணி மற்றும் சுவாமியை தூக்கிச் செல்லும் முறைதாரர்கள் தங்கத்தேர் பிடித்து மாட வீதியில் இழுத்துச் சென்றனர்.

திருத்தணி பெரிய தெரு, தாணிவராகபுரம், குமாரகுப்பம், அகூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுவாமியை தூக்கிச் செல்பவர்கள் தங்க தேரை இழுத்தனர். இதில், வள்ளி தெய்வயானை சமேதராய் உற்சவமூர்த்தி முருகக்கடவுள் எழுந்தருளி தேர் வீதியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.