தமிழ்நாடு

இரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி

இரண்டு தலைகளுடன் ஒட்டிப் பிறந்த ஆட்டுக்குட்டி

webteam

கோபிசெட்டிபாளையம் அருகே இரண்டு முகங்கள், 4 கண்களுடன் பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டியைக் காண பொதுமக்கள் குவிந்த‌ வண்ணம் உள்ளனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் உடையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கம்மாள். விவசாய பெண்மணியான இவர், தோட்டத்தில் வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த ஆடுகளில் ஒன்று குட்டி ஈன்றுள்ளது. அந்தக் குட்டி இரண்டு தலை, நான்கு கண்கள், இரண்டு வாய் என வித்தியாசமான முகத்தோற்றத்துடன் பிறந்துள்ளது. 

ஆட்டுக்குட்டி பிறக்கும் போதே இரு தலைகளுடன் பிறந்தது அதன் உரிமையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட ரங்கம்மாள் கால்நடை மருத்துவரை அழைத்துள்ளார். இரு தலைகளுடன் உள்ள ஆட்டுக்குட்டியை பார்த்த கால்நடை மருத்துவர், இவ்வாறாக எப்போதாவது பிறப்பது சஜகமாகதான் என்றும் இந்தக் குட்டிக்கு புட்டியில் பால் புகட்டுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே மருத்துவரின் அறிவுறைபடி, அவர் அந்தக் ஆட்டுக்குட்டிக்கு புட்டி பால் கொடுத்து வருகின்றார். மேலும் மரபணு குறைபாடு காரணமாக ஆட்டுக்குட்டி இப்படி இரண்டு தலைகளுன் பிறந்துள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர். இருப்பினும் பிறக்கும் போதே இரண்டு தலைகளுடன் பிறந்த அந்த அதிசய ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். 

இச்சம்பவம் நம்பியூர் பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் கிராம மக்களை ஆச்சரியத்தில் ரங்கம்மாள் வீட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.