தமிழ்நாடு

குமுளி மலைப்பகுதியில் காட்டுத்தீ !

குமுளி மலைப்பகுதியில் காட்டுத்தீ !

webteam

குமுளி மலையை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவியது.

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட சுரங்கனார் காப்புக்காடு வனப்பகுதியின் குமுளி மலையை ஒட்டியுள்ள
மேற்குத்தொடர்ச்சி மலையில் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் காட்டுத்தீ பரவி வருகிறது. கோடைக் காலத்தில் புற்கள் முழுவதும் எரிவதற்காக மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தீயை பற்ற வைத்திருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகம் கொண்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்கு உட்பட்டு சுரங்கனார் காப்புக்காடு வனப் பகுதியில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 200 ஏக்கருக்கும் அதிகமான பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பற்றி எரியும் பகுதி கேரள எல்லைப்பகுதியை ஒட்டியுள்ளது என்றும், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கால்நடைகளுக்கு பருவ மழைக்காலங்களில் புதிய புற்கள் முளைப்பதற்காக தீ வைத்திருக்கலாம் எனவும், சமூக விரோதிகள் மரக் கரிக்காக தீயை பற்ற வைத்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர், காட்டுத்தீயினால் அரியவகை மரங்கள், மூலிகைகள் அழிந்து வருகின்றன. வன உயிரினங்களுக்கு சேதம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.