தமிழ்நாடு

விபத்தான ராணுவ ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

விபத்தான ராணுவ ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

JustinDurai
உதகை மாவட்டம் நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் முக்கிய பாகங்கள் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன.
கடந்த 8ஆம் தேதி நேர்ந்த ஹெலிகாப்டர் விபத்து முப்படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்களை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தலா ஒன்றரை டன் எடையுள்ள ஹெலிகாப்டரின் எஞ்சின் மற்றும் வால் பகுதிகள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. இறுதி ஆய்வுக்குப் பின்னர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் இருந்து ராணுவம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.