கோவையிலுள்ள மொத்த விற்பனை மார்க்கெட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் அனுப்ப முடியாமல் மூட்டை,மூட்டையாக தேங்கி கிடக்கிறது.
கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு தினசரி 750 டன் காய்கறிகள் எடுத்து செல்லப்படுகின்றது. சில தினங்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆகவே போக்குவரத்து மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாளாக பெய்து வரும் கனமழையால் கோவையில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளது. வரும் இரண்டு நாட்களுக்கு கேரளாவில் பாதிப்பு நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மேலும் தேக்கம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் அழுகும் தன்மையுள்ள தக்காளி, வெங்காயம் ஆகியவை அழுகி சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கோவையில் காய்கறிகளின் விலை குறைந்து உள்ளது. மேட்டுப்பாளையத்தில் ஆறு கோடி ரூபாய் அளவிற்கான காய்கறிகள் தேக்கமடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.