தமிழ்நாடு

கந்த சஷ்டி சர்ச்சை : சுரேந்திரன், செந்தில்வாசனை காவலில் எடுக்க போலீஸ் மனு

கந்த சஷ்டி சர்ச்சை : சுரேந்திரன், செந்தில்வாசனை காவலில் எடுக்க போலீஸ் மனு

webteam

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில்வாசனை காவலில் எடுக்க சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செந்தில்வாசன், சுரேந்திரன், குகன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழகத்தில் அரசியல் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கந்த சஷ்டி கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் குகன் ஆகியோருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சுரேந்திரன் மற்றும் செந்தில்வாசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளார். எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த இந்த மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.