கனிமொழி - அமித் ஷா - நிர்மலா சீதாராமன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

மீட்புப் பணியில் முப்படைகள்.. மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி எம்.பி நன்றி!

தொடர் கனமழையால் திக்குமுக்காடி நிற்கும் தென்மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்கு முப்படையினரும் விரைந்துள்ளனர்.

PT WEB

தொடர் கனமழையால் திக்குமுக்காடி நிற்கும் தென்மாவட்டங்களில்  மீட்புப் பணிகளுக்கு முப்படையினரும் விரைந்துள்ளனர். இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க செய்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாரமன் மற்றும் அமித்ஷாவுக்கு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் உதவிகள் தேவை என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, 4 மாவட்டங்களிலும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முப்படைகளையும் மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. 15 மீட்புக்குழுவினர், 5 ஹெலிகாப்டர்கள், நிவாரணப் பொருட்கள் உடன் உள்ள கப்பல் ஒன்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக முப்படைகளை அனுப்பிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு நன்றி என கூறியுள்ளார்.

இதனை குறிப்பிட்டு தூத்துக்குடி எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், உடனடியாக தங்களது கோரிக்கையை ஏற்று உதவிகளை வழங்கிய மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.