ஓபிஎஸ்.ரவீந்திரநாத் தனது சாய்ராம் நிறுவனம் மூலம் கல்லால் குழுமத்திடம் இருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாயை பெற்றதாகவும், அந்த தொகையை உடனடியாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரவீந்திரநாத்துக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை இணைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் லைகா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், தயாரிப்பாளருமான ஜிகேஎம்.குமரனுக்குச் சொந்தமான சென்னை தி.நகரில் உள்ள 15 கோடி ரூபாய் மதிப்புள்ள இல்லத்தையும் இவ்வழக்கில் சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இந்த இரு சொத்துகளையும் சேர்த்து மொத்தமாக 36 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இது தவிர, அமைச்சர் உதயநிதி அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்து 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.