ஓவியர் செல்வம் PT
தமிழ்நாடு

'தங்க மனசுக்காரர் கேப்டன்’ - தங்ககாசால் கேப்டனின் படத்தை வரைந்து அஞ்சலி செலுத்திய ஓவிய ஆசிரியர்!

அன்பின் நிறைவால் அஞ்சலி: தங்க ஓவியத்தில் கேப்டன் உருவம்

PT WEB

ஓவிய அஞ்சலி: விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக "தங்கத்தாலேயே" (தங்க காசு ) தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை வரைந்து, ஓவிய ஆசிரியர் அஞ்சலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக ’தங்க மனசுக்காரர் கேப்டன்’ என்ற வாசகத்துடன் "தங்கத்தாலேயே" ( தங்க காசு ) ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்து அஞ்சலி செலுத்தினார்.

ஓவிய ஆசிரியர் செல்வம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் இருவரும் முன்னிலை இருக்கும்போது புரட்சிக் கலைஞராக மாஸ் காட்டியவர் விஜயகாந்த், ரசிகர்களால் செல்லமாக கேப்டன் என் அழைக்கப்பட்டார், தமிழ் திரை உலகிலும் சரி தமிழ்நாடு அரசியலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்.

ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில் :- "நல்ல மனிதர், அனைவராலும் விரும்பப்படக்கூடியவர், தங்க மனசுக்காரர் அவருடைய மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. ” என்றார்.

கேப்டன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை இரண்டு பவுன் மதிப்பு உள்ள தங்க காசுவை நீர் வண்ணத்தில் தொட்டு "தங்கத்தாலேயே" தங்க மனசுக்காரர் விஜயகாந்த் உருவத்தை ஐந்து நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்து அஞ்சலி செலுத்தினர் .