தமிழ்நாடு

பத்திரிகையாளர் தன்யா மீதான அவதூறுகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது: ஸ்டாலின்

பத்திரிகையாளர் தன்யா மீதான அவதூறுகள் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது: ஸ்டாலின்

webteam

பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து ட்விட்டர் இணையதளத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், ஜனநாயக நாட்டில் ஒருவருடைய கருத்தை ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரத்தை அதுவும் ஒரு பெண் பத்திரிகையாளரின் பேச்சு சுதந்திரத்தை நெறிக்க முயற்சிப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் சட்டம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் குறித்து ட்விட்டரில் அ‌வதூறான கருத்துகளை பதிவிட்டதாக‌ விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் ரசிகர்கள் 2 பேர் மீது 7 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சமீபத்தில் இந்தியில் வெளியான ஷாருக்கானின் படத்தை விஜய்யின் ‌சுறா படத்தோடு ஒப்பிட்டு தன்யா ராஜேந்திரன் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் ரசிகர்கள் எனக் கூறி கொண்டு சிலர் மோசமாக விமர்சித்தனர்.