தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று ஒகேனக்கல். கோடை காலம் தொடங்கிவிட்டாலே ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகையால் கலை கட்டிவிடும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிப்பதும், தொங்கு பாலத்திலிருந்து காவிரியின் அழகை ரசிப்பது, ஆயில் மசாஜ் செய்து கொள்வது, மீன்சாப்பாடு மற்றும் பரிசலில் சென்று அருவிகளை சுற்றி பார்த்தும் மகிழிகின்றனர்.
இதில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பது பரிசல் பயணம். பரிசல் பயணத்தின்போது, ஐந்தருவிகள் ஆர்பரித்து கொட்டும் இடம், சினிபால்ஸ், பொம்மச்சிக்கல், மணல் திட்டு, கர்நாடகா எல்லை, திரைப்படங்கள் எடுக்கும் இடம் என ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரிசல் பயணம் சுற்றுலாவுக்கு வருபவர்களை சந்தோஷப்படுத்தும். இந்த ஒரு மணி நேர பரிசல் பயணத்தில் பயணிகளுக்கு தாகம் எடுத்தாலும் மேலே வர முடியாது. கோடைக் காலம் என்பதால், அதிகளவு பயணிகள் பரிசலில் செய்ய வருவதால், பரிசல் பயணம் செய்யும் இடத்தில் பரிசலிலே நடமாடும் பெட்டிக் கடையை பரிசல் ஓட்டிகள் வைத்துள்ளனர்.
இந்த நடமாடும் பெட்டி கடையில், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள், நொறுக்கு தீணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்கு தீணிகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணத்தில், குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்ட தங்களுக்கு தேவையான நொறுக்கு தீணிகளை வாங்கி உண்டு, தங்களது பரிசல் பயணத்தை இனிமையாக களித்து வருகின்றனர். மேலும் பரிசல் செல்வதற்கு போதுமான லைப் ஜாக்கட் இல்லாத்தால், ஒரு நாளுக்கு ஒரு பரிசல் சவாரி செல்வதே பெரியதாக இருப்பதால், இந்த நடமாடும் பெட்டி கடை வைத்திருப்பதாக, பரிசல் ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.