தமிழ்நாடு

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால் “போக்குவரத்து நெரிசல் ஏற்படும்”

வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால் “போக்குவரத்து நெரிசல் ஏற்படும்”

webteam

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடந்தாண்டு தமிழக அரசு ஆணையிட்டது. இதற்கு பொதுமக்களிடம் கருத்துகளை கேட்ட திட்ட இயக்குநர் ஈனாக் தலைமையிலான குழு சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதால் மற்ற வீடுகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக தேனாம்பேட்டையில் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவில்லமாக மாற்றும்போது போயஸ்கார்டன் பகுதியில் இடையூறு இல்லாத அளவுக்கு நினைவு இல்லம் அமைக்க கோரிக்கை விடுத்தனர். 


இந்நிலையில் 2-வது கருத்துக் கேட்பு கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. அதில் ‘வேதா இல்லம் அமந்துள்ள போயஸ் கார்டன் பகுதி அமைதியாக இருக்க வேண்டும் என்றே ஜெயலலிதா விரும்பினார். அவரது இல்லத்தை நினைவில்லமாக மாற்றும்போது ஒரு வழிப்பாதையான அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்’ என்று பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். மேலும் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு செல்லும் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களால் குப்பை அதிகளவில் சேரும் என்ற கருத்தை தொடர்ந்து பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஒருசிலர் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தச் சூழலில் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம் என்று சிலர் ஆதரவு குரல் தருகின்றனர்.