தமிழ்நாடு

“திருச்சியில் இஸ்ரோ மையம்” - கே.சிவன் அறிவிப்பு

“திருச்சியில் இஸ்ரோ மையம்” - கே.சிவன் அறிவிப்பு

webteam

திருச்சியில் இஸ்ரோ ஆய்வு மையம் அமைக்கப்படும் என இஸ்ரோ அமைப்பின் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் இந்தாண்டு திட்டங்கள் குறித்து கே.சிவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தில் இஸ்ரோ ஆய்வு மையம் அமையும் என அவர் தெரிவித்தார். அதில் பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த பயிற்சியை தங்கள் அமைப்பு வழங்கும் என்றும் சிவன் தெரிவித்தார். 

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள 3 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் அவர்களுக்கு இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானிகள் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்குவார்கள் என்றும் சிவன் தெரிவித்தார்.

மாணவர்கள் செயற்கைக்கோள் தயாரிக்கும் திட்டம் இருந்தால் இஸ்ரோவை அணுகலாம் என்றும் அவர்கள்‌ தயாரிக்கும் செயற்கைக்கோள் இலவசமாக விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றும் சிவன் தெரிவித்தார். இந்திய எல்லைகளை கண்காணிப்பதற்காக பிரத்யேக செயற்கைக்‌கோள் ஏவப்படும் என்றும் இஸ்ரோ இனி தனக்குத் தேவையான பொருட்களை வெளி நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.