தமிழ்நாடு

சமயபுரம் வங்கிக் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை - காவல்துறை தகவல்

சமயபுரம் வங்கிக் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை - காவல்துறை தகவல்

webteam

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்பாப் நேஷனல் வங்கியில் கடந்த திங்கட்கிழமை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் வங்கியின் சுவரில் துளையிட்டு 5 லாக்கர்களை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள்,பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். 

இந்நிலையில் இந்தக் கொள்ளை சம்பவத்தை விசாரிக்க காவல்துறை பல தனிப்படை குழுக்களை அமைத்துள்ளது. அத்துடன் அந்த குழுக்களுக்கு ஏற்கெனவே நடைபெற்ற இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

“இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்த வங்கி குறித்து நன்கு அறிந்தவர்களாக இருக்கவேண்டும். மேலும் சென்னை நெடுங்சாலையில் கண்காணிப்பு கேமரா இல்லாததையும் கொள்ளையர்கள் பயன்படுத்தி கொண்டனர். அத்துடன் வங்கியின் பின்புறத்தில் மரம் செடிகொடிகள் அதிகம் இருந்ததால் கொள்ளையர்கள் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர் ”என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து திருச்சி காவல்துறை டிஐஜி லலிதா லக்ஷ்மி கூறுகையில் “ இந்த வழக்கு குறித்து இன்னும் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள். ஏனென்றால், இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொள்ளை சம்பவம் என்பதால் அவ்வாறு இருக்கலாம். எனினும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக” தெரிவித்தார்.