கோவை சிங்காநல்லூரில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன காப்பீடு எடுக்க முடியாமல் இருந்த தொழிலாளிக்கு தனது சொந்த செலவில் காப்பீடு எடுத்துகொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கோவை சிங்காநல்லூரில் போக்குவரத்து ஆய்வாளர் முருகன் என்பவர் வாகனச் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த சரவணக்குமார் என்பவரது வாகனத்தை சோதனை செய்தார்.
அப்போது வாகனக் காப்பீட்டை தவிர மற்ற ஆவணங்கள் சரிவர வைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் சமீப காலமாக வேலை இல்லாததால் வாகனக் காப்பீடு எடுக்க முடியவில்லை என சரவணக்குமார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனால் மனமுருகிய ஆய்வாளர் முருகன் தனது சொந்த செலவில் சரவணனுக்கு வாகன காப்பீடு எடுத்து கொடுத்துள்ளார். இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.