தமிழ்நாடு

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் 500 வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

webteam

விவி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜனின் வீடு, அலுவலகங்கள், அவரது மகனுக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், தங்கும் விடுதி, அரிசி ஆலை உள்ளிட்ட இடங்களில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் கோவை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக 500க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையில் உள்ள இடங்களில் சோதனை செய்வதற்காக இன்று காலை முதல் 20 வாகனங்களில் வந்த 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வள்ளியூர் துணை கண்காணிப்பாளர் கனகராஜ் தலைமையில் திசையன்விளை காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.