தமிழ்நாடு

ஐஐடி மாணவியின் செல்போன் தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு

ஐஐடி மாணவியின் செல்போன் தடயவியல் துறையிடம் ஒப்படைப்பு

webteam

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் செல்போன்  ‘அன்லாக்’ செய்யப்பட்டு தடயவியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரளாவைச் சேர்ந்த பாத்திமா கடந்த 8ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பாத்திமாவின் தற்கொலைக்கு 3 பேராசிரியர்களே காரணம் எனப் புகார் எழுந்தது.  தமது செல்போனில் தற்கொலைக்கான காரணத்தை பாத்திமா பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது. 

இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தடயவியல் துறையிடம் இருந்த பாத்திமாவின் செல்போனை அவரது தந்தை லத்தீப் மற்றும் சகோதரி ஆயிஷா ஆகியோர் ‘அன்லாக்’ செய்து கொடுத்தனர். 

மேலும், பாத்திமாவின் TAB மற்றும் மடிக்கணினியை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தியிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து ஆயிஷாவிடம் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.