தமிழ்நாடு

மீண்டும் விசாரணைக்கு வருவேன்: விவேக் ஜெயராமன்

மீண்டும் விசாரணைக்கு வருவேன்: விவேக் ஜெயராமன்

webteam

சசிகலா அண்ணன் ஜெயராமன் இளவரசி தம்பதியின் மகன் தான் இந்த விவேக் ஜெயராமன்.ஜெயலலிதா பெங்களூர் திராட்சை தோட்டத்தை கவனித்து வந்த ஜெயராமன் விபத்தில் இறந்த பின் போயஸ் தோட்டத்தில் தனது தாய் இளவரசி மற்றும் அக்காக்களுடன் குடியேறினார் விவேக் ஜெயராமன்.பல ஆண்டுகள் அங்கேயே இருந்தாலும் படிப்பிற்காக வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று ஜெயலலிதாவால் படிக்க வைக்கப்பட்டவர்.

ஜெயலலிதாவின் அதித அன்பையும் நம்பிக்கையையும் சிறு வயதில் பெற்றவர் விவேக், ஜெயலலிதாவை அத்தை என்றும் மற்றவர்களிடம் பேசும் போது பெரிய அத்தை என்றுமே சொல்வார் விவேக். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சசிகலா ஆகியோர் சிறையில் இருந்து போது ஜெயாவுக்கு மருந்துகள் கொடுக்க நம்பிக்கையான ஆள் தேவை என்று நிலை வந்த போது, சசிகலா மற்றும் இளவரசியால் அடையாளம் காட்டப்பட்டவர் விவேக். அப்போது பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் விவேக்.பின் ஜெயா விடுதலைக்கு பின் சென்னை வந்த விவேக் ஜாஸ் சினிமாசை  கவனித்து வந்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சில நாட்களுக்கு முன் தான் விவேக்கிற்கு திருமணம் நடைபெற்றது, ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது  விவேக், தனது தேன் நிலவு பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை வந்தார்.
 பின் அப்பல்லோ, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது முழுமையாக அங்கு தான் இருந்தார் விவேக் என்பது தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்லக்கூடியவை, இதன் அடிப்படையில் தான் ஆணையம் அவருக்கு சம்மன் கொடுத்தது.இன்று ஆஜராகி விசாரணையில் பங்கேற்ற விவேகிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார் நீதிபதி ஆறுமுகசாமி.

ஜெயலலிதா வீடியோ ஆவணங்களை விவேக்கிடம் தான் சசிகலா கொடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது.அதே போல மருத்துவமனையில் யார் யார் இருந்தனர் என்ற விவரம் விவேக்கிற்கு நன்கு தெரியும் என்று காரணத்தால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் விவேக் தான் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பரக்கவில்லை என்று சொன்னதாக சொல்கிறார்கள் ஆணைய வட்டாரத்தினர்.

விசாரணை முடித்த பின்னர், வெளியே வந்த விவேக் ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளேன்.ஆவணங்களை ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு ? விசாரணை நடைபெற்று வருவதால் அதை பற்றி சொல்ல இயலாது. மீண்டும் வரும் 28ம் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளனர், வேறு எதையும் சொல்ல முடியாது என்றார். ஆணையம் ஒருவரை மீண்டும் வர சொல்லியுள்ளது என்றால் அவரிடம் முழுமையாக விசாரணை செய்யவில்லை என்றே பொருள், மேலும் அவரிடம் விசாரணை நடத்தவே 28ம் தேதி வர சொல்லியுள்ளார் நீதிபதி ஆறுமுகசாமி.கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி இதே போல விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியாவிடம் ஆணையம் 3 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தது.