தமிழ்நாடு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் விவகாரம்: சேலம் ஆட்சியருக்கு நோட்டீஸ்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பேனர்கள் விவகாரம்: சேலம் ஆட்சியருக்கு நோட்டீஸ்

webteam

சேலத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை தடுக்காதது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அப்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டதாகவும், அவற்றிற்கு அனுமதி பெறாத நிலையில், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். முதலமைச்சர், அமைச்சர்கள் பெயரில் பேனர் வைக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சேலம் மாவட்ட ஆட்சியரும் மற்றும் மாநகர ஆணையரும் வரும் 26ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். மேலும் எதிர் மனுதாரர்களாக டிராபிக் ராமசாமி குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநரின்‌ செயலாளர், முதலமைச்சர், கிழக்கு மண்டல காவல்துறை ஐஜி, தலைமை செயலாளர் ஆகியோரின் பெயரை நீக்கக்கோரி  உத்தரவிட்டுள்ளனர்.