தமிழ்நாடு

விடிய விடிய பெய்த கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை

விடிய விடிய பெய்த கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை

webteam

விடிய விடிய பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விடிய விடிய பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதனால், பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழ துவஙகியது. இதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.