மழை! PT
தமிழ்நாடு

சென்னையில் விட்டு விட்டு VIBE பண்ணும் மழை!

சென்னையில் இன்றும் பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

PT WEB

சென்னையில் நேற்று மாலையில் இருந்து இரவு வரை விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மழை

அதில் சென்னை புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது மழை நீர் தேங்கி மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது.  சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை பொழிந்தது.

அதேபோல் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதன் காரணமாக ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும், இன்றும் பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.