தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

webteam

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை நேரத்தில் பெய்த மழையால் தங்கள் வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து, தமிழகத்தின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்தும், அணை நீர்மட்டமும் குறைந்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக கருதப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை, அதனை ஒட்டிய குமுளி, தேக்கடியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் கன மழையாகவும் தொடர்கிறது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா தலமான தேக்கடியில் குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் அங்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.