குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதே சமயம் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் லேசான மழை இருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் இன்று சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.