தமிழ்நாடு

சமூகப் பணி செய்யும் மாற்றுத்திறனாளி - பொதுமக்கள் பாராட்டு

சமூகப் பணி செய்யும் மாற்றுத்திறனாளி - பொதுமக்கள் பாராட்டு

PT

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவரின் சமூகப் பணி தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கரையில் அக்னி சிறகுகள் அமைப்பின் சார்பில் குறுங்காடு அமைக்கும் பணியை இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர். கரையோரத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரங்களான அரசு, வேம்பு, ஆலமரம், நாவல் மரக் கன்றுகளை நட்டு தினமும் 5 பேர் என சுழற்சி முறையில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

இந்த அக்னி சிறகுகள் குழுவில் இடம்பெற்றுள்ள மாற்றுத் திறனாளி கார்த்திக் முள்வேலி அமைப்பது, மரக்கன்றுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு வந்து தருவது, மரக்கன்றுகள் நடும் இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவது போன்ற உதவிகளை செய்து வருகிறார். இவரது தன்னலமற்ற சேவை மக்களால் வெகுவாக பாரட்டப்பட்டு வருகிறது. 

இது குறித்து மாற்றுத்திறனாளி கார்த்திக் கூறும் போது “ நாளைய சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இதைச் செய்கிறேன். இதே போன்று என்னால் முடிந்த பல வேலைகளை செய்து வருகிறேன். இதுவே என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது” என்றார்