தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க நடவடிக்கை - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Sinekadhara

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதையொட்டி தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்புக்கு பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 50% மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதில்,

  • கொரோனா பரவலை தடுக்க மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமரவைக்க வேண்டும்.
  • மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் கருவி ஆகியவை பள்ளிகளில் இடம்பெற வேண்டும்.
  • இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமரவைத்து பாடங்களை நடத்தலாம்.
  • முதல் நாளில் 50% மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50% மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வரவேண்டும்.
  • கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது.