சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார், 59 வயதான சின்னராசு என்பவர்.
இவர் கடந்த மாதம் 19-ம் தேதி தன் பள்ளியில் படித்த சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து கடந்த 26-ம் தேதியிலும் அவர் அச்செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் சின்னராசு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்து அவர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து போலீசார் தற்போது அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில், தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யட்பட்டது.
பின்னர் தலைமையாசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.