தமிழ்நாடு

தமிழகத்திற்குள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கும் திட்டம் - அரசாணை வெளியீடு

தமிழகத்திற்குள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கும் திட்டம் - அரசாணை வெளியீடு

webteam

தமிழகத்திற்குள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்குவதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அத்துடன் மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் முறைக்கான உள்மாநில பெயர்வுத் திறன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மட்டும் முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

உள்மாநில பெயர்வுத் திறன் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் விரவில் செயல்படுத்தப்பட உள்ளது. புதிய முறை தொடர்பான அறிக்கையினை வாரம் தோறும் அனுப்ப மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.