தமிழ்நாடு

அனிதாவின் சகோதரருக்கு அரசுப் பணி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

அனிதாவின் சகோதரருக்கு அரசுப் பணி வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

Rasus

நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் சதீஷ்குமாருக்கு அரசு வேலைக்கான நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்.

முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சதீஷ்குமாருக்கு தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணையை வழங்கினர். சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளராக சதீஷ்குமாருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அனிதாவின் தந்தை சண்முகத்திடம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

12 ஆம் வகுப்பில் 1,176 மதிப்பெண் பெற்ற அனிதாவுக்கு நீட் தேர்வு காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா செப்டம்பர் 1 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டமும் வலுப்பெற்றன. முன்னதாக அனிதாவின் உறவினர்கள் முதலமைச்சரின் உதவித்தொகையை வாங்க மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது அனிதாவின் தந்தையிடம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.