தமிழ்நாடு

‘திருமணமாகாத ஏக்கம்’ - சத்தியமங்கலத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் தற்கொலை

‘திருமணமாகாத ஏக்கம்’ - சத்தியமங்கலத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநர் தற்கொலை

webteam

சத்தியமங்கலம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்தில் இன்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த உடல் அருகே விஷபாட்டில் இருந்ததை கண்டனர். இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையில் இறந்தவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சின்ன கள்ளிப்பட்டியை சேர்ந்த ரமணி(38) என்பதும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேட்டுப்பாளையம் கிளையில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், திருமணமாகாத ஏக்கத்தில் இருந்த ஓட்டுநர் ரமணி மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகியதும், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

****

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)