இன்று தமிழ் வருட பிறப்பு என்பதாலும், அடுத்த வாரத்தில் ரம்ஜான் பண்டிகை வருகிறது என்பதாலும் புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் வரத்தும் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை ஆட்டுச்சந்தைக்கு விற்பனைக்காக ஆயிரக்கணக்கான ஆடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆடுகள் வரத்து போலவே, அதனை வாங்கிச்செல்வோரும்கூட அதிகளவில் குவிகின்றனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது.
இன்று நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆடுகளின் விலை கடந்த வாரங்களை விட இந்த வாரம் உயர்ந்துள்ளது. அந்தவகையில் கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 10,000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் 13,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அடுத்த வாரம் இதனை விட விலை உயர்ந்து இரண்டு கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம்வியாபாரிகள்
இதனால் கறிக்கடை உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாகவும், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுக்கறி விலையும் உயர்ந்து விற்பனையாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. ரம்ஜான் பண்டிகையை தொடர்ந்து கோயில் திருவிழாக்களும் அடுத்தடுத்து வருவதால் இனிவரும் நாட்களில் ஆடுகளின் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.