தமிழ்நாடு

குளு குளு குன்னூரில் பழக் கண்காட்சி !

குளு குளு குன்னூரில் பழக் கண்காட்சி !

webteam

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60ஆவது பழக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

சுற்றுலா பயணிகளைக் கவரும் விதமாக ஆண்டுதோறும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கண்காட்சியை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் தொடங்கி வைத்தார்.பார்வையாளர்களைக் கவரும் விதமாக பூங்காவின் முகப்பில் ஒரு டன் எடையில் திராட்சை பழங்களால் ஆன யானை மற்றும் யானை குட்டி உருவம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் ஆரஞ்சு, செர்ரி பழங்களைக் கொண்டு தங்க மீன்வடிவமைப்பு, திருச்சி சார்பில் முலாம்பழம், தர்பூசணிப் பழங்களால் ஆன மயில், கடலூர் சார்பில் இரட்டைமீன்கள், வாழைப்பழங்களால் ஆன பாண்டாகரடி உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.