தமிழ்நாடு

கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் முறைகேடு

கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் முறைகேடு

webteam

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தன்நபர் கழிப்பிடம் கட்ட 240 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் இத்திட்டத்தில் தென்கரை பேரூராட்சி சத்தியா நகர் 20க்கும் மேற்பட்ட பயணாளிகளுக்கு தனிநபர் கழிப்பிடம் கட்டும் பணியினை துவக்கி உள்ளனர்.

இதில் அந்தப் பகுதியில் ஏற்கனவே வீட்டின் உரிமையாளர்கள் குளிப்பதற்காக கட்டியுள்ள குளியல் அறையை வெள்ளையடித்தும் அதன் அருகே சிரிய குழி தோண்டி முறையற்ற முறையில் செப்டிக் தொட்டிகளை அமைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிநபர் கழிப்பிடம் கட்ட மத்திய அரசின் திட்டத்தில் 12000 ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இவர்கள் செய்யும் பணி 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை மட்டுமே செலவு செய்து விட்டு, தனிநபர் கழிப்பிடம் கட்டுவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தனிநபர் கழிப்பிடத்தை முறையாக கட்டி மக்களின் பயண்பாட்டிற்கு கொடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.