KA.Senkottaian pt desk
தமிழ்நாடு

அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி உடைய வாய்ப்பா? - செங்கோட்டையன் சொன்ன பதில் இதுதான்!

அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பாஜகவுடனான கூட்டணி உடைய வாய்ப்பா. யூகங்களுக்கு பதில் கூற முடியாது என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

webteam

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் காழ்வால் வசதி, கான்க்ரீட் தளம் அமைத்தல், குடிநீர் வசதி, சிறுபாலம் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியில் வெளியிட்ட போது, தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழலையும் வெளியிடுவேன் என்று கூறியது அவரது கருத்து. இது பாஜகவுடனான கூட்டணிக்கு நெருக்கடியா என்பதற்கு பதில் கூற முடியாது. ஊழல் பட்டியலை கவர்னரிடம் அதிமுக கொடுக்குமா என்பது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்வார்.

2024 தேர்தலில் அதிக சீட் பெறுவதற்காக அதிமுகவை பயமுறுத்த அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணியை பொறுத்த வரை அதிமுக தெளிவாக உள்ளது. கூட்டணியை பொறுத்த வரை அதிமுக தலைமையும், டெல்லியும் தான் முடிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் கூட்டணியை முடிவு செய்ய வாய்ப்பில்லை.

அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டு வெளியானால் பாஜகவுடனான கூட்டணி உடைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, யூகங்கள் அடிப்படையில் பதில் கூற முடியாது. கர்நாடகாவில் அதிமுக போட்டியிடிவது குறித்து பொதுச் செயலாளர் முடிவு செய்ய வேண்டும் என்றார்.