மாலத்தீவில் இருந்து கப்பலில் தூத்துக்குடிக்கு தப்பி வந்த முன்னாள் துணை அதிபர் திருப்பி அனுப்பப்பட்டார்.
மாலத்தீவில் துணை அதிபராக இருந்த அகமது அதீப், மே தின விழாவில் துப்பாக்கியுடன் வந்ததாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். டொனிடோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஜுன் மாதம் உரிய அனுமதியுடன் சென்னையில் சிகிச்சை பெற்று திரும்பினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பியதாக செய்திகள் வெளியானது.
விர்கோ 9 என்ற இழுவைக் கப்பலில் அதீப் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்ததை, இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் கண்டுபிடித்தனர். தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவரிடம், டெல்லியில் இருந்து வந்த குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்றிரவு வரை நீடித்த விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அதீப் மீண்டும் மாலத்தீவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.
சர்வதேச கடல் எல்லையில் மாலத்தீவு கடற்படையினரிடம் அவரை ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.