தமிழ்நாடு

எங்கெல்லாம் மஞ்சப்பை திட்டம் வருகிறது? சுப்ரியா சாஹு பேட்டி

எங்கெல்லாம் மஞ்சப்பை திட்டம் வருகிறது? சுப்ரியா சாஹு பேட்டி

Sinekadhara

தமிழகத்தின் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்களில் மஞ்சப்பை திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தார். அப்போது, கோயம்பேட்டில் தொடங்கி வைத்தது போன்றே பாரிமுனை மற்றும் தமிழகத்தின் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் தனியார் மால்களில் மஞ்சப்பை திட்டம் வரும் நாட்களில் விரைவில் தொடங்கி வைக்கப்படும். இந்த மெஷின்களில் பயன்படுத்தப்படும் மஞ்சள் பை, மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும்.

தற்போது கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலையில் மலைவாழ் மக்களுக்கென்று அவரது பிள்ளைகள் அரசுப் பள்ளிகளுக்கு செல்வதற்கு மின்சார வாகனம் தமிழக அரசு சார்பில் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பிற மலைவாழ் பகுதிகளுக்கும் வாகனங்கள் கொடுக்கப்படும். சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை மையத்தை பசுமை மையமாக மாற்றுவதற்கு சோலார் மின் உற்பத்தி, கார்பன் பயன்பாடு குறைவு போன்ற புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பசுமை கோயம்பேடு ஆக மாற்றப்படும்’’ என்று தெரிவித்தார்.