தமிழ்நாடு

திடீர் மழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்...! விவசாயிகள் வேதனை

திடீர் மழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்...! விவசாயிகள் வேதனை

webteam

பருவம் தவறிய மழையால், கடலூர் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ‌அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளன‌ர்.

கடலூர் மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வறட்சியால் கருகிய சூழலில், குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா சாகுபடி செய்திருந்தனர். அறுவடைக்குத் திட்டமிட்டிருந்த வேளையில், திடீரென பெய்த மழையால் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் அரசு உடனடியாக தங்களுக்கு உதவ வேண்டுமென எனவும் விவசா‌யிகள் கோரிக்கை விடுத்தனர்.