தமிழ்நாடு

அதிதீவிர புயலாக மாறும் 'Amphan' புயல்

அதிதீவிர புயலாக மாறும் 'Amphan' புயல்

webteam

அடுத்த 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக 'Amphan' புயல் மாறும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான 'Amphan' புயல் வடக்கு, வடமேற்கு திசையில் 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. 'Amphan'  புயலானது தெற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 660 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கே சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தப் புயலானது ஒடிசா கடற்கரையை நோக்கி வட மேற்கில் நகர்ந்து பின்னர் அதி தீவிர புயலாக மாறக்கூடும் எனவும் அதன்பின்னர், மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் 'Amphan' புயல் அதிதீவிர புயலாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் 'Amphan' புயல் உருவானதால் மேற்கு வங்கம், ஒடிசாவில் பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.