வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் அப்போதைய தேசிய பழங்குடியினர் ஆணைய தென் மண்டல இயக்குனர் பாமதி ஐ.ஏ.எஸ். அளித்த அறிக்கைதான் தற்போது தீர்ப்பு வழங்க முக்கிய காரணியாக இருந்தது என்பதுதான் தவிர்க்க முடியாத உண்மை.
அத்தகையை அறிக்கை குறித்து புதிய தலைமுறைக்காக பாமதி ஐ.ஏ.எஸ். அவர்களிடமே சில கேள்விகளை முன்வைத்தோம். அவர், “நான் தனிப்பட்டு வாச்சாத்தி சென்று ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயார் செய்தேன். ஒவ்வொருவரிடமும் தனியாக பேசி உண்மையை அறிக்கையாக அளித்தேன். காவல்துறை, வனத்துறை, வருவாய் துறையினர் கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனது அறிக்கை மூலம் விசாரணையை நடத்தியது சிபிஐ. நீதி கிடைக்க வேண்டும் என்றால் நேர்மையாக வலியை தாங்கிக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். அவரது முழு பேட்டியையும் கீழுள்ள இணைப்பில் விரிவாக காணலாம்.