ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுளள் பத்ரா இன்று சென்னை வந்தார்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் வியாக்கிழமை நடைபெறவுள்ளது. வரும் 20 ஆம் தேதியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பத்ரா இன்று சென்னை வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பணியாற்றி வரும் ஊழியர்கள், அதிகாரிகளை முதலில் சந்தித்துவிட்டு, பின்னர் அரசியல் கட்சியினரையும் சந்திக்கவிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பத்ரா கூறினார். இந்நிலையில் ஆர்.கே.நகரில் பணம் விநியோகம் செய்யதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.