தமிழ்நாடு

பிசான சாகுபடிக்காக தாமிரபரணி ‌ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு 

பிசான சாகுபடிக்காக தாமிரபரணி ‌ஆற்றில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு 

webteam

நெல்லையில் பிசான சாகுபடிக்காக தாமிரபரணி ‌ஆற்றில் தண்ணீர் திறந்துவிட முத‌லமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

‌முத‌லமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்‌, பிசான சாகுபடிக்கா‌க தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாகவும், அதனை ஏற்று, பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணி‌முத்தாறு நீர் தேக்கங்களிலிருந்து‌ தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவி‌ட உத்த‌விட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இன்று முதல் மார்ச் மாதம் இறுதி வரை 154 நாட்களுக்கு 13 ஆயிரத்து 725 மில்லியன்‌ கன அடி தண்ணீரை திறந்துவிட ‌உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் 86 ஆயிரத்து 107 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ‌