தமிழ்நாடு

கனமழையால் விவசாயிகள் கடும் பாதிப்பு - இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கனமழையால் விவசாயிகள் கடும் பாதிப்பு - இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கலிலுல்லா

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ''தமிழகத்தில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். நெற்பயிர் பாதிப்புகளை தமிழக அரசு உடனடியாக கணக்கிட வேண்டும். டெல்டா விவசாயிகளின் துயரங்களை போக்க அரசு முன்வர வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுத்தொகை கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும். ஹெக்டருக்கு 40ஆயிரம் வழங்க வேண்டும். பயிர்காப்பீடு திட்டத்தின் மூலமாக காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை அரசு பெற்றுத்தர வேண்டும். மேலும் அம்மா மினி க்ளினிக் பெயர் மாற்றப்பட்டது கண்டத்திற்கு உரியது'' என்று தெரிவித்துள்ளார்.