அமலாக்கத்துறை சோதனை pt desk
தமிழ்நாடு

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை - ரூ.12.41 கோடி பறிமுதல்... அமலாக்கத்துறை தகவல்

தொழில் அதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் மொத்தம் 12.41 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: பிரவீண்

பிரபல தொழில் அதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் கடந்த வியாழக்கிழமை முதல் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகா, மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேகலாயா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் என மொத்தம் 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை சனிக்கிழமை இரவு வரை நீடித்தது.

ரூ.12.41 கோடி பறிமுதல்

இந்த சோதனையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய நிறுவனங்கள், பியூச்சர் கேம் நிறுவனம் மற்றும் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் மொத்தம் 12.41 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 6.42கோடி ரூபாய் பணத்தை முடக்கி இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.