தமிழ்நாடு

தமிழகத்தில் இ-ஸ்டாம்பிங் முறை அறிமுகம்!

தமிழகத்தில் இ-ஸ்டாம்பிங் முறை அறிமுகம்!

webteam

நீதித்துறைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

போலி முத்திரைத்தாள் பயன்பாட்டை ஒழிக்க தமிழகத்தில் இ-ஸ்டாம்பிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, திட்டத்தை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து இ-ஸ்டாபிங் முறையில் கட்டணத்தை செலுத்தும் கவுன்டர்களை திறந்துவைத்து முதல் 5 பேருக்கான ரசீதை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 

அப்போது பேசிய அவர், போலி முத்திரைத்தாள் ஒழிப்பு, பதிவுகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வழி செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். தற்போது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளையில் தொடங்கப்பட்டுள்ள இ-ஸ்டாம்பிங் முறை, அடுத்தகட்டமாக அனைத்து மாவட்ட முதன்மை நீதிமன்றங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார். இ-ஸ்டாம்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தும் 8ஆவது மாநிலம், தமிழகம் ஆகும். இதன் மூலம் வழக்குக்கான கட்டணத்தை மின்னணு முறையில் பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை வழக்கு தொடர்வதற்கான கட்டணம், ஸ்டாம்ப், பத்திரம் மூலமாகவே பெறப்பட்டு வந்தது.