உலகின் மிகப்பெரிய வைரக்கல் முதன்முறையாக துபாயில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
‘THE ROCK’ என அழைக்கப்படும் இந்த வைரக்கல், 20 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்ரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது. கிறிஸ்டி நிறுவனம் முதன்முறையாக இந்த வைரக்கல்லை ஏலத்தில் விடுகிறது. இதனையொட்டி துபாயில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் பலரும் இதனை ஆர்வமாக கண்டு செல்கின்றனர். இந்த வைரக்கல் ஜெனிவா நகருக்கு கொண்டு செல்லப்பட்டு மே மாதம் ஏலம் விடப்படுகிறது. வைரம் சுமார் 228 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என்று கிறிஸ்டி நிறுவனம் கணித்துள்ளது.