தமிழ்நாடு

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு

webteam

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

கஞ்சா, ஹெராயின், கொகைன், சூடோ எபிடரின், எல்.எஸ்.டி, எபிடரின் போன்ற போதைப்பொருட்கள் கிலோ கணக்கில் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மதுரை - கொச்சின் வழியாக அதிகளவு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு 405 கிலோவும், 2017ஆம் ஆண்டு 455 கிலோ போதைப்பொருட்களும் பிடிபட்டுள்ளது. இந்த அளவு 2018‌ஆம் ஆண்டு மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.