தமிழ்நாடு

சாக்கடைக் கழிவுகளை கைகளால் அகற்றும் அவலம்

சாக்கடைக் கழிவுகளை கைகளால் அகற்றும் அவலம்

webteam

திருவாரூரில் துப்புரவுப் பணியாளர்கள் இடுப்பளவு சாக்கடை வடிகாலில் இறங்கி கழிவுகளை கைகளால் அகற்றும் அவலம் அரங்கேறியுள்ளது.

திருவாரூரில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு எந்தவித தற்காப்பு சாதனங்களும் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவாரூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை வடிகால் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. கழிவுநீர் கால்வாயிலுள்ள அடைப்பை சரிசெய்ய, கால்வாய்க்குள் இடுப்பளவு ஆழத்திற்கு இறங்கி கைகளால் சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாக துப்புரவு தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாதுகாப்புக்காக தங்களுக்கு கையுறை போன்ற உபகரணங்கள் எதையும் நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை எனவும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.