mkstalin, edappadi, annamalai pt
தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் 2024: நேரடியாக மோதிக்கொள்ளும் திமுக - பாஜக.. அதிமுக - பாஜக.. எங்கெல்லாம் தெரியுமா?

மக்களவைத் தேர்தலில் திமுக - பாஜக மற்றும் அதிமுக - பாஜக எந்தெந்த தொகுதிகளில் நேரடியாக மோதிக்கொள்கின்றன எனும் செய்தியை கீழ்கண்ட செய்தித்தொகுப்பில் காணலாம்.

யுவபுருஷ்

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்துத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி) நிலவுகிறது.

இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. அந்த வகையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும் அக்கட்சிகள் விரும்பிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அதில் 4 கட்சிகள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.

தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆங்காங்கே பரப்புரையை தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.கஸ்டாலின் திருச்சியில் இருந்து நேற்று பரப்புரையை தொடங்கினார். மற்ற கூட்டணி கட்சிகளும் பரப்புரையை தொடங்கிவிட்டன. இந்நிலையில், கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகளில் திமுக VS பாஜக, அதிமுக VS பாஜக கட்சிகள் நேரடியாக மோதுகின்றன என்பதை பார்க்கலாம்.

திமுக VS பாஜக

1.மத்திய சென்னை: தயாநிதி மாறன் - வினோஒஜ் பி செல்வம்

2.பொள்ளாச்சி: கே. ஈஸ்வரசாமி - கே.வசந்தராஜன்

3.தென்காசி: ராணி ஸ்ரீகுமார் - பி. ஜான் பாண்டியன்(தமமுக)

4.தஞ்சாவூர்: எஸ்.முரசிலி - எம். முருகானந்தம்

அதிமுக VS பாஜக

1.சிதம்பரம்: எம்.சந்திரசேகரன் - பி.கார்த்தியாயினி

2.கன்னியாகுமரி: பசிலியான் நசரேத் - பொன். ராதாகிருஷணன்

3.கரூர்: கே.ஆர்.எல் தங்கவேல் - வி.வி செந்தில்நாதன்

4.கிருஷ்ணகிரி: வி.ஜெயபிரகாஷ் - சி. நரசிம்மன்

5.மதுரை: பி.சரவணன் - ராம சீனிவாசன்

6.நாகப்பட்டினம்: ஜி.சுர்ஜித் சங்கர் - எஸ்.ஜி.எம் ரமேஷ்

7.சிவகங்கை: பனங்குடி ஏ சேவியர்தாஸ் - தேவநாதன் யாதவ்(IMKMK)

8.திருநெல்வேலி: ஷிம்லா முத்துசோழன் - நைனார் நாகேந்திரன்

9.திருப்பூர்: பி.அருணாச்சலம் - ஏ.பி முருகானதம் ஆகியோர் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதால், இந்த நேரடி போட்டி பட்டியலில் சேர்க்கவில்லை.