தமிழ்நாடு

எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து பரப்புரை தொடரும்: திமுக

எத்தனை தடைகள் வந்தாலும் உடைத்தெறிந்து பரப்புரை தொடரும்: திமுக

webteam

எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும் என அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆ.ராசா, கனிமொழி, உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும், ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, எ.வா.வேலு, தயாநிதி மாறன், டி.கே.எஸ் இளங்கோவன், பொன்முடி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

அதில், எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும் என அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மக்களாட்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் தேர்தல் பரப்புரை செய்யும் உரிமை உண்டு எனவும் கொரோனா ஆய்வு என்ற போர்வையில் மாவட்டந்தோறும் முதலமைச்சர் அரசு விழாவை அரசியல் கூட்டமாக நடத்துகிறார் எனவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக, கடந்த 3 நாட்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதில் நேற்று மட்டும் இரவு 10 மணி வரை விடுவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.